தலைமையாசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம்

திருபுவனை: பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 5 நாள் பயிற்சி முகாம், மதகடிப்பட்டு வாசவி கல்வியியல் கல்லுாரியில் துவங்கியது.இப்பயிற்சி முகாமில், விழுப்புரம், கோலியனுார், கண்டமங்கலம், வானுார், காணை ஆகிய 5 ஒன்றியங்களைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.மரக்காணம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) ராஜபுவனேஸ்வரி, பயிற்சியை துவக்கி வைத்தார். கண்டமங்கலம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.விழுப்புரம் மாவட்ட சமக்ர சிக் ஷா மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மரக்காணம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) ராஜபுவனேஸ்வரி, மரக்காணம் வட்டாரவள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் அமுதா, சிவக்குமார், செல்வநாதன், ஒலக்கூர் வட்டாரவள மைய ஆசிரியர் பயிற்றுனர் வேலுமணி ஆகியோர் பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தனர்.வட்டாரவள மைய மேற்பார்வையாளர் மரியபிரகாசம் நன்றி கூறினார். முகாம் ஒருங்கிணைப்பு பணிகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் ரமேஷ், லட்சுமணன் ஆகியோர் செய்திருந்தனர்.