Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 17, 2019

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ரூ. 56,100 சம்பளத்தில் வேலைவாய்ப்பு



இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் காலியாக இருக்கும் 327 Scientist / Engineer பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Scientist/Engineer - SC (Electronics) - 131 காலிப்பணியிடங்கள்
Scientist/Engineer -SC (Mechanical) - 135 காலிப்பணியிடங்கள்
Scientist/Engineer-SC (Computer Science) - 58 காலிப்பணியிடங்கள்
Scientist/Engineer-SC (Electronics) - Autonomous Body - 03 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

B.E. / B.Tech. -ல் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :

ரூ. 56,100 மற்றும் இதர படிகள் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

பெண்கள், SC/ST வகுப்பை சார்ந்தவர்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்று திறனாளிகள், பொருளாதாரத்தில் பன்தங்கியவர்கள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற பிரிவை சார்ந்தவர்கள் அனைவரும் ரூ. 100 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.isro.gov.in/sites/default/files/billingual_advertisement.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 04.11.2019