8வது வகுப்பு தேர்ச்சியா? ரூ. 15,700+ சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு


தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் 63 அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் : 63 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

சம்பளம் :

ரூ. 15,700 முதல் 50,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை https://dish.tn.gov.in/assets/pdf/candidateform.pdf தறவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்திருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://dish.tn.gov.in/assets/pdf/notifyrecruitment.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 31.10.2019