திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு


திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடம்:

ஓட்டுனர்

கல்வித் தகுதி:

8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி:

இலகுரக அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கூடவே இலகுரக வாகனம் எனில் 3 ஆண்டுகல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், கனரக வாகனம் எனில் குறைந்தபட்சம் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:01.09.2019 அன்று 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

ஊதியம் :

ரூ. 10,000 ஒப்பந்த ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை :

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பம், மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் அனைத்தும் இணைத்து பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2019/10/2019101729.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி :

மண்டலப்பயிற்சி இணை இயக்குநர்,
மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் (முதல்தளம்),
அரசு பல்துறை கட்டிட வளாகம்,
காஜாமலை, திருச்சி - 20

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2019