இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ துவக்கம்


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்லுாரிகள் சார்பிலும், பல்கலை சார்பிலும், வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணல் நடத்தப்படும்.இதில், தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களின் தேவைக்கு ஏற்ப, மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். நடப்பு கல்வி ஆண்டில், அண்ணா பல்கலை நேரடி கல்லுாரிகளில், ஏற்கனவே வளாக நேர்காணல் நடந்து முடிந்துள்ளது.அதேபோல, இணைப்பு கல்லுாரிகளும், தாங்களே நேரடியாக, வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணலை நடத்தி முடித்துள்ளன. அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, மண்டல வாரியாக, வளாக நேர்காணலை, அண்ணா பல்கலை துவக்கியுள்ளது. இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், ஆர்வத்துடன் இவற்றில் பங்கேற்றுள்ளனர்.வளாக நேர்காணலில், பல்வேறு பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், சாப்ட்வேர் நிறுவனங்களும் பங்கேற்று, மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்த நேர்காணல் முகாம், டிசம்பர் வரை நடக்கும் என, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.