மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
மாவட்ட நீதிபதி : 32 காலிப்பணியிடம்

கல்வித் தகுதி :

சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமா 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் :

எஸ்சி, எஸ்டி, மாற்று திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 2000/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://www.mhc.tn.gov.in/recruitment/login விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_2_2019.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2020