சிறப்பாசிரியர் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி நியமனம் வழங்ககோரி நாளை TRB அலுவலகத்தில் கோரிக்கை மனு!


ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 23.09.2017 அன்று நடைபெற்ற சிறப்பாசிரியர் (உடற்கல்வி, தையல், இசை, ஓவியம்) போட்டித்தேர்வை எழுதி அதன்மூலம் 532 உடற்கல்வி ஆசிரியர்கள் TRB வெளியிட்டுள்ள இறுதிபட்டியளில் இடம்பெற்றுள்ளோம். தேர்வு எழுதி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து 16 மாதங்கள் கடந்தும் இன்னும் எங்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணிநியமனம் என்பது எங்களின் வெறும் கனவாகவே உள்ளது..ஆகவே உடற்கல்வி துறையினருக்கான கலந்தாய்வு உடனே நடத்தி விரைவில் பணிநியமனம் செய்திட வேண்டும் என்ற நீண்டநாள் (இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக) வலியுறுத்தி தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் 06.01.2020 அன்று (திங்கள்கிழமை) காலை 11.00 am முதல் TRB ல் மீண்டும் ஒன்றிணைந்து எங்களது கோரிக்கையை மீண்டும் வலுவாக வலியுறுத்த உள்ளோம். கடந்த காலங்களில் ஆதரவு தந்த தாங்கள் இந்த முறையும் ஆதரவு தந்து எங்களது கோரிக்கை வெற்றி பெற உதவிட வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.
Request Letter to CM - Download here...

தொடர்புக்கு...

சேகர் (கடலூர்)
99769 86432
சரவணன் (நாகபட்டினம்)
99769 13130
ரா.தங்கேஸ்வரன் (விருதுநகர்)
99430 92312
திவ்யா (விழுப்புரம்)
82209 62996