JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கணினி ஆசிரியர் பணியிடங் களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் சார்ந்து தேர்ச்சி பெறாதவர்கள், உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவர்கள் என கண்டறியப்பட் டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜன. 8, 9,10 ஆகிய மூன்று நாள்கள் சென்னையில் நடைபெறவுள்ளன.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஆசிரி யர்தேர்வு வாரியம் சார்பில் கணினி பயிற்றுநர் நிலை1-க்கான (முதுநிலை ஆசிரியர்நிலை)கணினி வழியிலான தேர்வு கடந்த ஜூன் 23, ஜூன் 27 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகள் கடந்த நவ.25-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தேர்வெண் விவரப் பட்டியல் நவ.28-இல் வெளி யானது. பின்னர் உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம்செய்வதற்குடிச.2-ஆம் தேதி முதல் டிச.5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.இதையடுத்து, கல்வித் தகுதிகள் சார்ந்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேவையான கல்வித் தகுதி கள் சார்ந்து சான்றிதழ்களைப்பதிவேற்றம் செய் யாதவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜன.8, 9,10 ஆகிய மூன்று நாள்கள் சென்னையில் நடைபெறவுள்ளது.
உரிய சான்றிதழ் சரிபார்ப் புக்கான அழைப்புக் கடிதங்களை (www.trb.tn.nic.in) இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறுஞ்செய்தி வழியாகவும் தகவல் அனுப்பப்படும்.
WEBSITE 1 : CLICK HERE
WEBSITE 2 : CLICK HERE
WEBSITE 3 : CLICK HERE