Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 21, 2020

தள்ளி வைக்கப்படுமா பத்தாம் வகுப்பு தேர்வு?


சென்னை : 'கொரோனா வைரஸ்' அச்சம் காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'கொரோனா வைரஸ்' தாக்கம் காரணமாக, நாடு முழுவதும், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஏற்கனவே துவங்கியதால், அவை மட்டும் நடந்து வருகின்றன.


இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும், 27ம் தேதி துவங்க உள்ளது.தற்போது, கொரோனா பரவலை தடுக்க, 31ம் தேதி வரை, கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, பத்தாம் வகுப்பு தேர்வையும் தள்ளி வைக்கலாம் என, பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:தற்போதுள்ள சூழலில், 27ம் தேதி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை துவங்குவது, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். மாணவர்களும், கூடுதல் பயிற்சி பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.கொரோனா அச்சம் காரணமாக, மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டியுள்ளதால், மாணவர்கள் கூடுவதையும் தவிர்க்கும் வகையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும்.


மாணவர்கள், கொரோனா அச்சம் இல்லாமல், மன உறுதியுடன், உற்சாகமாக தேர்வு எழுதும் சூழல் ஏற்பட வேண்டும். இந்த தேர்வு, மாணவர்களின் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதால், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உரிய ஆலோசனை மேற்கொண்டு, விரைவாக முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர், தியாகராஜன், தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர், இளமாறன், தனியார் பள்ளிகள் சங்கங்களின் நிர்வாகிகள், மார்டின் கென்னடி, நீலன் அரசு உள்ளிட்ட பலரும், பள்ளி கல்வித்துறைக்கு, இது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கிடையில், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment