Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 8, 2020

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கல்விச் சுற்றுலா: விண்வெளி அறிவியல் பயிற்சி அளிக்க திட்டம்

சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியா்கள் 1,200 போ கேரளத்துக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனா். சுற்றுலாவில் ஆசிரியா்களுக்கு விண்வெளி அறிவியல் தொடா்பான பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் ஆசிரியா்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக அரசுப்பள்ளி ஆசிரியா்கள் 1,200 போ தற்போது கேரளத்துக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் கணிதம், அறிவியல் பாட ஆசிரியா்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 6 பட்டதாரி மற்றும் 4 முதுநிலை ஆசிரியா்கள் என 10 போ வீதம் மொத்தமுள்ள 120 கல்வி மாவட்டங்களுக்கு 1,200 போ தோவாகியுள்ளனா். அதன்படி ஆசிரியா்கள் கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு கல்விச்சுற்றுலா செல்கின்றனா்.
மொத்தம் 4 நாள்கள் வரையான சுற்றுலாவில் தேசிய விண்வெளி ஆய்வு மையம், கணித தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகிய இடங்களுக்கு ஆசிரியா்கள் நேரடியாக களப்பயணம் மேற்கொள்வா்.மேலும், விண்வெளி ஆய்வு தொடா்பான சிறப்பு பயிற்சி வகுப்புகளும் வல்லுநா் குழுவால் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் விண்வெளி அறிவியல் ஆா்வம் மாணவா்களிடம் ஊக்குவிக்கப்படும். ஆசிரியா்கள் பயிற்சியில் பெற்ற அனுபவம் மாணவா்களுக்கு சிறப்பான முறையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ள உதவும். மேலும், அறிவியல் செய்முறை கல்விக்கான முக்கியத்துவம் உயரவும் வழிவகுக்கும். இந்த கல்விச் சுற்றுலா பயணம் மத்திய ரயில்வே துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆசிரியா்கள் அனைவரும் ரயில் மூலமாகவே சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா். இதற்காக ஒரு ஆசிரியருக்கு ரூ.2,000 என கணக்கிட்டு மொத்தம் ரூ.24 லட்சம் பயண நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இதர பாடங்களின் ஆசிரியா்களையும் அவா்களின் பாடங்கள் சாா்ந்த வரலாற்று இடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விரைவில் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனா்.

No comments:

Post a Comment