Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 16, 2020

கரோனாவை விரட்டும் சோப்பு!


துணி, தோல், மரப் பொருள்கள் உள்ளிட்டவற்றில் "கரோனா' வைரஸ் வலுவாக ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது. அவற்றிலிருந்து நமது கைகளுக்கு வைரஸ் இடம்பெயர்கிறது. பெரும்பாலான நபர்கள் 2 முதல் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கைகள் மூலம் முகத்தைத் தொடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களை அறியாமலேயே இந்தச் செயலை அவர்கள் மேற்கொள்கின்றனர். எனவே, வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டியது அவசியம். நமது கைகளில் "கரோனா' வைரஸ் வலுவாக ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. அதன் காரணமாக, வெறும் தண்ணீரில் கைகளைக் கழுவுவது மட்டும் வைரûஸக் கைகளிலிருந்து நீக்காது.



ஆனால், சோப்பில் எண்ணெய்ப்படலம் போன்ற பொருள் உள்ளது. அது "கரோனா' வைரஸில் காணப்படும் கொழுப்புப் படலத்தை உடைக்கும் தன்மை கொண்டது. எனவே, சோப்பைப் பயன்படுத்தி கைகளைக் கழுவும்போது, கைகளிலிருந்து வைரஸ் எளிதில் நீங்கிவிடுகிறது.
பொதுவாக வைரஸ்கள் 50 முதல் 200 நானோ மீட்டர் அளவு கொண்டவை. நமது கைகளில் உள்ள சிறு சிறு சுருக்கங்களில் கூட அவை எளிதில் புகுந்து ஒளிந்துகொள்ளும். எனவே, குறைந்தபட்சம் 15 முதல் 20 விநாடிகள் வரை சோப்பைப் பயன்படுத்தி கைகளை நன்கு கழுவுவது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment