Tuesday, November 25, 2014

காதலின் எச்சம்



காதலின் எச்சம்

உன் பார்வை தீபம்
என்மீது விழும்போதெல்லாம்
மெழுகு இதயம்
உருகுகிறது கண்ணீராய்

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு கணமும்
நெருப்பிடை தென்றல் சுகம்

பள்ளிக் கூட வாசல்தேடி
வேளையோடு வருவதும்
வகுப்பறை பாடம் மறந்து
நம்மை நாம் ரசித்ததும்
இன்றும்
இறந்தகால நினைவுகள்
நிகழ்காலமாய்

காம்பின் பூவாய் இருந்த நம்மை
பிரித்துவிட்டது அந்தப் புயல்
காதலின் எச்சம் தொடர்ந்தால்
மீண்டும் இணைவோம்
அடுத்த ஜென்மத்தில்