Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 14, 2018

அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' மூலம் மே மாதம் மூன்றாவது வாரத்தில் இடமாறுதல் கவுன்சிலிங்!!


தமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், கல்வி ஆண்டு துவக்கத்தில், பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.

2017க்கு முன் வரை, ஜூலை மற்றும் ஆகஸ்டில், இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. 2017 முதல், கோடை விடுமுறையின் போதே, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளதால், மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங்கை நடத்தலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும், ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.இந்த பயிற்சியும் பாதிக்கப்படாமல், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்துவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த முறை, அனைத்து தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என, அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, கவுன்சிலிங்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.