Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 29, 2018

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை





சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்பு மாணவர்கள் சேர்க்கையில், ‘ஆன் லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2018 – 19ம் கல்வி ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு, ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் முறை, கொண்டு வரப்பட்டுள்ளது.
பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை, பி.பார்ம், பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., – பி.ஓ.டி., மீன் வள அறிவியல் – பி.எப்.எஸ்சி., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த அனைத்து பட்டப் படிப்புகள் ஆகியவற்றுக்கு, ‘ஆன்லைன்’ முறையில், வரும்m மே, 31ம் தேதி வரை, மாணவர்கள் பதிவு செய்யலாம்.முற்றிலும் தகுதி அடிப்படையிலும், கலந்தாய்வு முறையிலும் மாணவர் சேர்க்கை நடக்கும். கலந்தாய்விற்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.’மேலும் விபரங்களுக்கு, பல்கலைக் கழக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்’ என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.