Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 13, 2018

எம்.பி.பி.எஸ்.: ஜூலை 1-ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு: இதுவரை 26,628 விண்ணப்பங்கள் விற்பனை




தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர இதுவரை 26,628 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது.
இது தவிர www.tnhealth.org , www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



2-ஆம் நாள் விற்பனை: அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 8167, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடங்களுக்கு 863 என மொத்தம் 9,030 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாள்களிலும் சேர்த்து மொத்தம் 26,628 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்ட கலந்தாய்வு: விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்ப ஜூன் 18-ஆம் தேதி கடைசியாகும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 5 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.