Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 11, 2018

24 மணி நேரமும் பணியில் இல்லாவிட்டால் டாக்டர்கள் சம்பளம் கட் : பொதுசுகாதார இயக்குநர் எச்சரிக்கை24 மணி நேரமும் பணியில் இல்லாவிட்டால் சம்பளம் கட் : பொதுசுகாதார இயக்குநர் எச்சரிக்கை




வேலூர் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இல்லாவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரித்து
பொதுசுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 1,751 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 382 ஊரக குடும்ப நல மையங்கள், 110 பேறு கால பின் கவனிப்பு மையங்கள், 108 நகர்ப்புற குடும்ப நல மையங்கள் உள்ளன. இங்கு டாக்டர்கள் இரவு நேரங்களில் பணியில் இருப்பதில்லை. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விபத்து, பேறுகால சிகிச்சை போன்றவற்றிற்கு இரவு நேரத்தில் அரசு மருத்துவமனைகளை நம்பி சென்றால் அங்கு சிகிச்சை பெறமுடியாத நிலை உள்ளதாக புகார் எழுந்தது.



அதோடு இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தாலுகா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பது கட்டாயம். அப்படி பணியில் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கு அன்றைய தினம் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அத்துடன் மெமோ வழங்கப்படும் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைச்சாமி உத்தரவிட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.