Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்கள் உட்பட) தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) ஜூன் 19-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த இணையதளத்தில் `HSE June/July 2018 Hall Ticket Down load' என்பதை கிளிக் செய்து தங்கள் மார்ச் 2018 தேர்வு பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் அவர்களுக்குரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.