Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 14, 2018

7-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கம் வாழ்க்கை வரலாறு




தேசியத் தலைவர்களில் ஒருவரான மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தின் வாழ்க்கை வரலாறு, வரும் கல்வியாண்டில் 7-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் இடம்பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

சட்டப்பேரவையில் மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுல்லன் என்கிற செல்வம் பேசும்போது 6-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த பசும்பொன் முத்துராமலிங்கம் வாழ்க்கை வரலாறு தற்போது இடம்பெறவில்லை என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியது: தேசியத் தலைவரான முத்துராமலிங்கத்தின் வாழ்க்கை வரலாறு முன்பு இருந்ததைவிட மேலும் பல்வேறு தகவல்களுடன் வரும் கல்வியாண்டில் 7-ஆம் வகுப்பு பாடத்தில் இடம்பெறும் என்றார்.