Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 13, 2018

கால்நடை மருத்துவம்: ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல்




கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவம் -பராமரிப்பு மற்றும் உணவுத் தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழிநுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளுக்கும் மே 21 -ஆம் தேதி முதல் ஜூன் 11 -ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பத்தைப் பதிவு செய்ய கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கால்நடை மருத்துவப் படிப்புக்கு 12,107 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 2,418 பேரும் என மொத்தம் 14,525 மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்.



ஜூன் 18 கடைசி நாள்: இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப ஜூன் 18-ஆம் தேதி நாளாகும். இதுவரை சுமார் 7,000 பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. 

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.