Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 18, 2018

அரிவாள்மனைப் பூண்டின் அற்புத மருத்துவ குணங்கள்...!





ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலவீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.
அரிவாள்மனைப் பூண்டின் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து பொடி செய்து சர்க்கரையுடன் சேர்த்துத் தினமும் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

அரிவாள்மனைப் பூண்டு பொடியை 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.



அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பற்றிட இரத்தப் பெருக்கு நிற்கும். அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் பூச அவை குணமாகும். (உப்பு, புளி நீக்க வேண்டும்).

அரிவாள்மனைப் பூண்டு இலைகைப்பிடி அளவு, குப்பைமேனி இலை கைப்பிடி அளவு, பூண்டு2 பல், மிளகு3, ஆகியவற்றை அரைத்து, புன்னைக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் வைத்துக் கட்ட பூச்சிக்கடியினால் ஏற்படும் நஞ்சு முறியும்.

அரிவாள்மனை இலை, கிணற்றுப் பாசான இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து, புழுவெட்டு உள்ள இடத்தில் தடவினால், விரைவில் மாறும். அரிவாள்மனைப் பூண்டு இலையோடு சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு மீது தடவி வர குணமாகும்.



அரிவாள்மனை இலை, சம அளவு குப்பைமேனி இலையையும் சேர்த்து அரைத்துப் பற்றிட, படர்தாமரை குணமாகும். அரிவாள்மனைப் பூண்டு இலை, கிணற்றுப் பாசான இலை, எலும்பு ஒட்டி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துப் காயத்தின் மீது பற்றிட உள்ள வீக்கம் குறையும்.