தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் வகையில், ஆதார் எண்ணுக்கு பதிலாக 16 இலக்கங்கள் கொண்ட 'மெய்நிகர் அடையாள எண்' வழங்கும் புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் அனைத்து மக்களிடம் இருந்தும், கை, கருவிழி ரேகையை பெற்றுக் கொண்டு, அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை கொண்ட 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அரசின் மானியம் பெறுவதிலிருந்து சிம்கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் தரப்படும் ஆதார் எண்ணால் அதில் உள்ள அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது.
இதனால், ஆதார் எண் திட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்பும், நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆதார் எண் வழங்கும் உதய் (UIDAI) நிறுவனம், தனிநபர் தகவல்களை பாதுகாக்க புதிய வழிமுறையை வகுத்துள்ளது. அதாவது, ஆதார் எண்ணை நேரடியாக யாருக்கும் தராமல் 'மெய்நிகர் அடையாள எண்' (virtual identity number) எனப்படும் தற்காலிக எண்ணை வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது, 16 இலக்கங்களை கொண்டது. இது சுருக்கமாக 'விஐடி' என அழைக்கப்படுகிறது. இதை முதற்கட்டமாக, 'இகேஒய்சி' எனப்படும் மின்னணு முறையில் வாடிக்கையாளர்களை அறியும் விண்ணப்பத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
விஐடி எண்ணை பெறும் ஆன்லைன் வர்த்தகம் (இ-வாலட்), தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவை வழங்கும் நிறுவனங்கள், இதை பயன்படுத்தி வாடிக்கையாளரின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் போன்ற சில தகவல்களை மட்டுமே அறிய முடியும். வங்கி, வருமான வரித்துறை உள்ளிட்ட அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் மட்டுமே வாடிக்கையாளரின் பெயர், முகவரியை தாண்டி அவரை பற்றி கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம், தனிநபரின் தனிப்பட்ட ரகசிய தகவல்கள் பாதுகாக்கப்படும்.
இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த தற்காலிக எண்ணை பயன்படுத்தும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள, இம்மாதம் 31ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது.
அதேபோல், வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றின் செயல்பாடு மிகப்பெரியது என்பது என்பதால், இதுபோன்ற முக்கிய துறைகளுக்கு மட்டும் ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆகஸ்ட் 31க்குப் பிறகு இந்த எண்ணை முழு அளவில் பயன்படுத்துவது எல்லா துறைகளிலும் நடைமுறைக்கு வர உள்ளது.
மாறும் வரை அபராதம்
ஆதார் எண்ணுக்கு பதிலாக 16 இலக்கங்கள் கொண்ட தற்காலிக எண்ணை பயன்படுத்தும் புதிய நடைமுறைக்கு, இ-வாலட் உள்ளிட்ட சேவை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களை மாற்றிக் கொள்ளும் வரை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 காசுகள் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இம்மாதம் 31ம் தேதிக்குள் தற்காலிக எண்ணை பெறும் வசதியை இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தி விட்டால், பிடித்தம் செய்யப்பட்ட அபராதத் தொகை திருப்பி தரப்படும். இந்த அவகாசம் வங்கி உள்ளிட்ட பெரிய நெட்வொர்க் கொண்ட துறைகளுக்கு மட்டும் ஆகஸ்ட் 31 வரை உள்ளது.
விஐடி பெறுவது எப்படி?
'உதய்' நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்காலிகமாக 'விஐடி' எண்ணை பெறுவதற்கான இணைப்பு தரப்பட்டுள்ளது. அதில், ஆதார் எண்ணை பதிவு செய்தால், செல்போனுக்கு ஓடிபி (ஒன்டைம் பாஸ்வேர்ட்) வரும். அதைத்தொடர்ந்து விஐடி எண்ணை மொபைலில் பெறலாம். இந்த எண், ஒவ்வொரு முறையும் மாறுபடும். ஒரு நாளைக்கு ஒரு தற்காலிக எண் என்ற வகையில் இது மாறுபடும். தனிநபர் ஒருவர் விஐடி எண்ணை பெற்று, மீண்டும் மறுமுறை தற்காலிக எண் கோரும் போது மட்டுமே முதலில் வழங்கப்பட்ட எண் செயலிழக்கும். எனவே, ஒவ்வொருவருக்கும் தற்காலிக முறையிலேயே இந்த எண் வழங்கப்படும்.
புதிய பான் கார்டு இனி உடனடியாக கிடைக்கும்
ஆதார் அடிப்படையில் பான் கார்டுகளை உடனடியாக வழங்கும் வசதியை வருமான வரித்துறை நேற்று அமல்படுத்தி உள்ளது. புதிதாக பான் எண் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வருமான வரித்துறையின் என்ற இணையதளத்தில் 'இன்ஸ்டன்ட் பான்' என்ற லிங்க் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஆதாரில் உள்ளதைப் போல் பெயர், பிறந்ததேதி, செல்போன் எண், ஆதார் எண்ணை வழங்கினால் உடனடியாக பான் எண் வழங்கப்பட்டு விடும்.. பிறகு பான் கார்டு சில தினங்களில் தபாலில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வசதி தனிநபர்களுக்கு மட்டுமே. நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு கிடையாது.