Search This Blog

Tuesday, July 24, 2018

பி.ஆர்க். மாணவர் சேர்க்கை: ஜூலை 26-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

0 comments
பி.ஆர்க். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 26) சரி பார்ப்பு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



இது தொடர்பான அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

பி.ஆர்க். படிப்பில் சேர மொத்தம் 1,874 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக உதவி மையம், ஆவடி அருகில் முருகப்பா பாலிடெக்னிக் உதவி மையம் உள்பட மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 32 உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

பிற்பகல் 3 மணி முதல்...இந்த உதவி மையங்களில் வரும் 26-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பித்து, சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லாத மாணவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 




பி.ஆர்க். படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகு தரவரிசைப் பட்டியல், சென்னையில் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.