Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 29, 2018

இனி வாட்ஸ் அப்லேயே ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என நேரடி நிலை விசாரிக்கலாம்: சூப்பர் சிஸ்டம்


இனி வாட்ஸ் அப் -லேயே ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என நேரடி நிலை விசாரிக்கலாம்.தற்போது வாட்ஸ் அப் பயன்படுத்தி நீங்கள் செல்ல விரும்பும் ரயிலின் நேரடி நிலையை ஒருநொடியில் விசாரிக்கலாம்.





ஸ்மார்ட் போன் வந்ததிலிருந்து நாம் ஏதேனும் பொருட்களை வாங்குதல், இணையதளத்தில் தேடுதல் என எல்லாமே அதிலேயே செய்துவருகின்றோம். இந்த மேலும் அதிகமாக்கியுள்ளதுதற்போது கிடைத்துவரும் இலவச இணையதளம்.


ஆன்லைனிலேயே எல்லா முக்கிய வேலையையும் அலையாமல் மொபைலிலேயே செய்து முடித்து வருகிம் நிலையில் நீங்கள் பயணிக்க இருக்கும் அல்லது ஒரு ரயில் எங்கு வந்துகொண்டிருக்கின்றது என்ற நேரடி நிலவரத்தையும் தற்போது குறுஞ்செய்திகளுக்கு பதிலாக வாட்ஸ் அப்-லேயே பெறக்கூடிய புது வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

எப்படி ரயில் நேரடி நிலையை அறிவது :



முதலில் 7349389104 என்ற இந்த எண்ணை உங்கள் மொபைலில் சேமிக்கவும்.உங்கள் வாட்ஸ்-அப்-ஐ திறக்கவும்.வாட்ஸ்-அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் நேரடி நிலை பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்பவும்.அடுத்த இரண்டு, மூன்று நொடிகளில் உங்கள் வாட்ஸ்-அப்பிற்கு நீங்கள் அறிய விரும்பிய ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது. அடுத்து எந்த ரயில் நிலையத்திற்கு செல்ல உள்ளது. எத்தனை நிமிடங்களில் சென்றடையும் என்ற அனைத்து தகவல்கள் அடங்கிய ரயிலின் நேரடி நிலையை உங்கள் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.