Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 30, 2018

பி.இ. கலந்தாய்வு இரண்டாம் சுற்று இன்று தொடக்கம்


பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வின் இரண்டாம் சுற்று இடங்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்குகிறது.

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க 10,734 பேர் அனுமதிக்கப்பட்டதில், 7,347 பேர் மட்டுமே முன்வைப்புத் தொகை செலுத்தினர்.




இவர்களில் இடங்களைத் தேர்வு செய்த 7,303 பேரில் 7,136 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இடங்களை உறுதி செய்தவர்களுக்கு திங்கள்கிழமை கல்லூரி சேர்க்கைக் கடிதம் வழங்கப்படும். அதை அவர்கள் கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்துக்கொள்ளலாம்.

முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. இரண்டாம் சுற்றில் பங்கேற்க 20,000 மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.



ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை 5 மணி வரை ஆன்-லைனில் இவர்கள் இடங்களைத் தேர்வு செய்யலாம். அவர்களுக்கு வியாழக்கிழமை தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அதை அவர்கள் வெள்ளிக்கிழமைக்குள் உறுதிப்படுத்த வேண்டும். இதை உறுதி செய்யும் மாணவர்களுக்கு சனிக்கிழமை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படும்.

அவ்வாறு தற்காலிக ஒதுக்கீட்டை வெள்ளிக்கிழமைக்குள் உறுதிப்படுத்தத் தவறும் மாணவர்களுக்கு, ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.