Search This Blog

Monday, July 23, 2018

செவிலிய பட்டயப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்ப விநியோகம்

0 comments
தமிழகத்தில் செவிலிய பட்டயப் படிப்பில் ("டிப்ளமோ இன் நர்சிங்') மாணவிகளைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது.



தமிழகத்தில் மொத்தம் 2,000 செவிலிய பட்டயப் படிப்பு இடங்கள் உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.

ஜூலை 31 கடைசி: விண்ணப்பத்தைப் பெற ஜூலை 30-ஆம் தேதியும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 31-ஆம் தேதியும் கடைசி நாளாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.