Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 15, 2018

கோழிப் பண்ணை போல் பள்ளிகள்: நீதிபதி கிருபாகரன்


சில தனியார் பள்ளிகள் கோழிப் பண்ணைகளைப் போல் செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.



கடலூர் மாவட்டம் வடலூரில் நேற்று (ஜூலை 14) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி கிருபாகரன் கலந்துகொண்டு பேசினார்.

"தமிழ்நாட்டில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் கோழிப்பண்ணைகளைப் போல் பள்ளிகள் செயல்படுகின்றன. 

இந்தப் பள்ளிகளில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து மருத்துவர், இன்ஜினீயராக வேண்டும் எனக் குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்கின்றனர். மாணவர்களின் கனவுகள் கலையும்போது தற்கொலை செய்து கொள்கிறார்கள்" என வேதனையுடன் பேசியுள்ளார்.