JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, July 8, 2018

சுந்தரனார் பல்கலை.யில் எம்பிஏ பயில விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மை துறையில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



கடந்த மே 18ஆம் தேதி நடைபெற்ற தமிழக அரசின் பொது நுழைவுத் தேர்வு (பஅசஇஉப) எழுதிய மற்றும் எழுதாத மாணவர்களும் தற்போதுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

விருப்பமுள்ளவர்கள் www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்துடன் ரூ. 650க்கான வரைவோலையை (எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ. 150) இணைத்து, துறைத் தலைவர், மேலாண்மையியல் துறை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி 12 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். 



வரும் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டும்.