Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 30, 2018

எம்.பி.பி.எஸ்.: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று கலந்தாய்வு

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 30) தொடங்க உள்ளது.



சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஜூலை 30, 31 தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். காலை 10 மணிக்கு தரவரிசை 1 முதல் 2519 வரை பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஜூலை 31-ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழகத்தைப் பூர்வீகமாககக் கொண்டு மலையாளம் அல்லது தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு படித்து, 2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறுபான்மையின மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு வேலூர் கிறிஸ்தவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். 



கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை மாணவர்கள் www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.