Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 20, 2018

ஆகஸ்ட் 21-ம் தேதி உதயமாகிறது இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி!!!


டெல்லி தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்பு*

🌷ஆகஸ்ட்-21 அன்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் (ஐபிபிபி) செயல்பாடுகளைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான துவக்க விழா டெல்லி யின் தல்கதோரா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.


🌷அஞ்சல் துறை யின்கீழ் (தொலைத்தொடர்பு அமைச்சகம்) இயங்கவிருக்கும் இந்த வங்கி 100 சதவீதம் அரசுக்கு சொந்தமானதாகும். அனைத்து மக்களையும் வங்கி சேவை சென்றடையும் வகையில் போஸ்ட் பேமெண்ட் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன.



🌷இந்த வங்கிகளின் மூலம் சுமார் 11,000 தபால் ஊழியர்கள் வாடிக்கையாளரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று டிஜிட்டல் வங்கி சேவைகளை அளிக்க இருக்கிறார்கள். 650 கிளைகளோடு இயங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த வங்கியின் அணுகு மையங்கள் 3,250 தபால் நிலையங்களில் அமைக்கப்பட இருக்கின்றன.

🌷இந்த ஆண்டு இறுதிக்குள் 1.55 லட்சம் தபால் நிலையங்களை ஐபிபிபியுடன் இணைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

🌷தற்பொழுது ராய்ப்பூர் மற்றும் ராஞ்சியில் இந்த வங்கி கிளைகள் சோதனை முறையில் இயங்கி வருகின்றன.

🌷பேமெண்ட் வங்கிகளின் மூலம் ரூ.1 லட்சம் வரையிலான நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளை தொடங்கமுடியும்.

🌷வெளிநாடு களில் உள்ள இந்தியர்கள் அனுப்பிய பணத்தைப் பெறுதல், மொபைல் பேமெண்ட், நெட் பேங்கிங், டெபிட் அட்டை, மூன்றாம் நபர் பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளைப் பெறமுடி யும்.

🌷ஆனால் கடன் அளித்தல், கடன் அட்டைகளை அளித்தல் போன்ற சேவைகளை பேமெண்ட் வங்கிகள் வழங்காது.

🌷தபால் ஊழியர்கள் வாடிக்கையாளரின் வீட்டுக்கே வந்து வங்கி சேவைகளை அளிப்பது போஸ்ட் பேமெண்ட் வங்கியின் சிறப்பம்சங் களில் ஒன்றாகும்.

🌷புதிதாக வங்கிக் கணக்கு துவங்குதல், வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தல், பணத்தை செலுத்துதல், பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு சேவைகளை வீட்டிற்கு நேரடியாக வந்து தபால் ஊழியர்கள் அளிக்க இருக்கிறார்கள்.



🌷தபால் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து அளிக்கும் சேவையின் மூலம் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.5000 மட்டுமே பணம் எடுக்கவோ அல்லது செலுத்தவோ முடியும். நடப்புக் கணக்கு வைத்திருந்தால் அதிகபட்சமாக 20,000 ரூபாய்வரை பணம் எடுக்கவோ அல்லது செலுத் தவோ செய்யலாம்.

🌷தபால் ஊழியர் வீடுகளுக்கு நேரடியாக வந்து புதிய கணக்கைத் தொடங்குவதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. ஆனால் பணத்தை கணக்கிலிருந்து பெறுதல் மற்றும் பணத்தை செலுத்துதல் போன்ற செயல்பாடு களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும். பிற பண பரிவர்த்தனைகளுக்கு ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும்.

🌷நிதி பரிவர்த்தனைகளுக்கு வங்கி கணக்கு எண்ணை பயன் படுத்துவதற்கு மாற்றாக க்யூஆர் அட்டையை இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. பயோமெட்ரிக் சரி பார்ப்பு முறையில் இந்த அட்டை யைப் பயன்படுத்தி நிதிப் பரிவர்த் தனைகளை எளிதாக செய்ய முடியும். இதனால் வங்கி கணக்கு எண்ணின் தேவை குறைய இருக்கிறது.

🌷தற்பொழுது தபால் நிலையக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதனை ஐபிபிபி வங்கிக் கணக்காக மாற்றிக் கொள்ள முடியும். சேமிப்புக் கணக்குகளுக்கு 4% வட்டி அளிக்கப்படுகிறது. குறைந்தபட்ச தொகையை இந்தக் கணக்குகளில் வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே வைப்புத் தொகை யாக வைத்திருக்க இயலும்.



🌷இந்தக் கணக்குகளில் இருந்து பணத்தை இத்தனை முறைகள் மட்டுமே எடுக்கமுடியும் என்பதுபோன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது.