எலும்புகளை வலிமையாக்கும் இயற்கை முறைகள்!!!


மனிதர்களுக்கு மிக முக்கியமான பாகங்களில் ஒன்று எலும்பு. நமது உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் உதவியாக இருப்பது எலும்புகள்தான். நமது எலும்புகள் வலிமையாய் இருக்கும்வரைதான் நமது உடல் ஆரோக்கியமாய் இருக்க முடியும். வயதாக வயதாக நமது எலும்புகளின் ஆரோக்கியம் குறைந்து கொண்டே வரும். எனவே நமது எலும்புகளை வலிமையாய் வைத்துக்கொள்ள வேண்டியது நமது கட்டாயம்.
கடைகளில் நமது எலும்புகளை வலிமைப்படுத்த நிறைய மாத்திரைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றால் பயன் எதுவும் முழுமையாய் கிடைப்பதில்லை என்பதே உண்மை. இயற்கை முறையில் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்போதே அது நிரந்தரமானதாக இருக்கும். அவ்வாறு இயற்கை முறையில் எலும்புகளை வலுப்படுத்தும் முறைகளை இங்கே பார்க்கலாம்.



இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்க்கிமானது கால்சியம்தான். பழைய எலும்பு செல்கள் புதிய எலும்பு செல்களால் தொடர்ந்து மாற்றப்பட்டு கொண்டேயிருக்கும். எனவே தினமும் கால்சியம் நிறைந்த சாப்பிடவேண்டியது அவசியம். கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், சீஸ், மீன் மற்றும் பாதம் போன்ற உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது எலும்புகளை வலுப்படுத்துவதோடு இதயத்தையும் பாதுகாக்கும்.

புரோட்டின்

கால்சியம் போலவே புரோட்டினும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. சொல்லப்போனால் 50 சதவீத எலும்புகள் புரோட்டினால் ஆனவைதான். ஆய்வுகளின் படி புரோட்டின் குறையும்போது எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சும் தன்மையை இழக்கின்றன. எனவே எலும்புகளின் வலிமை குறைந்து எளிதில் உடையக்கூடிய நிலை ஏற்படலாம். தினமும் நமது உடலுக்கு 86 கிராம் புரோட்டின் தேவைப்படுகிறது. இந்த அளவு குறையாத அளவிற்கு ஆரோக்கியமான உணவுமுறையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். புரதசத்து நிறைந்த உணவுகளான முட்டை, சோயா மற்றும் கடல் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.



வைட்டமின் டி

எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு தினமும் 1000 முதல் 2000 ஐயு வரை வைட்டமின் டி தேவை. வைட்டமின் டி குறைபாடு ஆஸ்டோபோரோசிஸ் , ஆஸ்டோபோர்னியா போன்ற எலும்புகள் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஐம்பது கோடி பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்ட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் டி-யை சூரிய ஒளி, மீன், ஈரல் போன்றவற்றிலிருந்து நீங்கள் பெறலாம்.

உடற்பயிற்சிகள்

உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு ஆஸ்டோபோரோசிஸ் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் நிச்சயம் உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும். அது நடைப்பயிற்சி, ஓடுதல், அல்லது ஜிம் செல்லுதல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடற்பயிற்சியை தொடங்கும்முன் உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.

கலோரிகளை குறைக்கக்கூடாது

ஆரோக்கியமான உணவுமுறை என கலோரிகளை குறைவான அளவில் எடுத்துக்கொள்வது சரியான வழியல்ல. இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிப்பதோடு, தசையையும் பலவீனமாக்கக்கூடும். நாளொன்றுக்கு 1000 கலோரிகளுக்கு குறைவாக எடுத்துக்கொள்ளும்போது அது எலும்புகளின் வலிமையை பாதிக்கும். எலும்புகளின் ஆரோக்கியம் சீராக இருக்க ஒருநாளைக்கு குறைந்தது 1200 கலோரிகளாவது தேவை.

புகை மற்றும் மதுப்பழக்கம்

புகைப்பிடிப்பதால் ஏராளமான தீமைகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது அதில் முக்கியமான ஒன்று எலும்புகள் சேதமடைவது. புகையிலை பொருட்கள் அதிகம் எடுத்துக்கொள்வது எலும்புகளை பலவீனமாக்கும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.அதேபோல தினமும் மது அருந்துவது உங்கள் எலும்புகள் கால்சியம் உறிஞ்சுவதை தடுக்கும். மேலும் இதனால் ஆஸ்டோபோர்னியா ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

சீரான எடை



ஆரோக்கியமான உணவுமுறையுடன் எடையை சீராக வைத்திருப்பதும் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். ஏனெனில் குறைவான எடை உள்ளவர்களுக்கு ஆஸ்டபோர்னியா ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் குறைவாக சுரப்பதால் எலும்புகள் விரைவில் சேதமடையும். அதே போலத்தான் அதிக எடை உள்ளவர்களுக்கும் எலும்புகள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம். எடை குறைக்க முயலும்போது நாம் இழப்பது எடையை மட்டுமல்ல, எலும்புகளின் ஆரோக்யத்தையும்தான். எனவே எலும்புகளை பாதிக்காத வண்ணம் ஆரோக்கியமான உணவுமுறைகளை கொண்டு எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ முயலவேண்டும்.
Share:

Total Pageviews

Categories