Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 19, 2018

ஆசிரியராக வேலை செய்துகொண்டு கல்லூரியில் முழு நேரம் படிப்பது ஏற்கக்கூடியதல்ல


முழுநேர ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு கல்லூரியில் முழுநேரப்  படிப்பில் சேர்வது ஏற்கக்கூடியதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முழு நேர ஆசிரியராக பணியாற்றி வருபவர் சண்முகவள்ளி. இவர் கல்லூரியில் முழு நேரம் பணியாற்றிக்கொண்டே அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்இ படித்து வந்தார்



இதையடுத்து, அவர் மீது சிலர் அண்ணா பல்கலைக்கழகத்தில் புகார் கொடுத்தனர்

புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் சண்முகவள்ளி எழுதிய தேர்வுகளை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முழு நேரம் ஆசிரியராக பணியாற்றும் நிலையில் முழுநேர மாணவியாக கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாது. இது பல்கலைக்கழக விதிகளுக்கு முரணானது

எனவே, அவர் முழுநேரம் ஆசிரியராக பணியாற்றும் நிலையில் அவருக்கு முழுநேரம் கல்வியைத் தொடர அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்