Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 22, 2018

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு


பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வை 44,058 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களில் 561 பேர் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். 



இவர்களுடைய 1,179 விடைத் தாள்கள் மறுகூட்டலுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 10 தேர்வர்களின் விடைத்தாள்கள் மட்டுமே மதிப்பெண் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் வெளியிடப்படும். அன்றைய தினமே www.dge.tn.nic.in தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்தப் பட்டியலில் பதிவெண் இடம்பெறாத தேர்வர்களின் விடைத் தாள் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இல்லை.