அரசுபள்ளி ஆசிரியர்கள் சிறந்தவர்களாகவும்,அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் உயர்ந்த பதவியிலும் உள்ளனர்- பள்ளி்க் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்...

இலுப்பூர்,ஆக.16:அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறந்தவர்களாக இருப்பதால் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் குடியரசுத்தலைவர் ,அரசு அதிகாரிகள் என பல்வேறு நிலைக்கு வந்துள்ளனர் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்..

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்விமாவட்டத் தொடக்க விழா, விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு புரவலர் நிதி வழங்கும் விழா,பத்நாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேரச்சியை பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா,தேர்சியை பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை இலுப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது...

மாவட்ட ஆட்சித் தலைவர் சு.கணேஷ் வரவேற்றுப் பேசினார்....மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புரவலர் நிதி வழங்கி பேசியதாவது:புதுக்கோட்டை மாவட்டம் ஓர் கல்விக்கோட்டை என்றே சொல்லலாம்..காரணம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செவ்வனே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதே ஆகும்..இங்குள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,மாவட்டக்கல்வி அலுவலர்கள்,வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆகியோர்கள் சீரிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்...புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாக இருந்த கல்வி மாவட்டம் தற்பொழுது மூன்றாக இலுப்பூர் கல்வி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது...

கிராமப்புற மாணவர்கள் தொலைதூரம் சென்று கற்கும் பொழுது ஏற்படும் சிரமத்தை போக்க இந்தாண்டு நான்கு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும் ,மூன்று உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்தாண்டு பெற்றுள்ள நூறு சதவீத தேர்ச்சியை விட வரும் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் நூறு சதவீத தேர்ச்சியினை எட்ட வேண்டும்.இந்த நல்லாட்சியில் இந்தியாவில் சுறுசுறுப்பாக பி.டி.உஷாவைப் போல் வேகமாக ஓடிக் பொண்டிருப்பவர் நமது கல்வி அமைச்சர் தான் .நான் கூட அவரை போல ஓட நினைத்தாலும் வேகத்திலே சுறுசுறுப்பிலே எனக்கு முன்னோடி அவர் தான்..அவர் தான் ஓடுவது மட்டுமல்லாமல் தன் துறையையும் வேகமாக ஓட வைப்பவர்..
Share:

Total Pageviews

Categories