Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 7, 2018

1000 மாணவர்கள்; 3,100 ஆசிரியர்கள்'- கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இந்த ஆண்டு நீட் சபதம்


கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 24 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்'' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து மாணவ - மாணவியர்களிடம் சேகரிக்கப்பட்ட 1.62 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை கேரளாவுக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, கொடியசைத்து லாரிகளை கேரளாவுக்கு அனுப்பிவைத்தார். 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ’’தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஈரோட்டில் இருந்து 2.6 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 

தற்போது, நெல்லையிலிருந்து 1.62 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை 22 லாரிகள்மூலம் அனுப்பிவைத்துள்ளோம். கேரள மக்களுக்கு உதவிசெய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.