Sunday, September 30, 2018

பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு முகாம்

மதுரையில் பள்ளி மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று வாசிப்பு மற்றும் கதை கூறும் முகாம்களை திருஞானம் துவக்க பள்ளி தலைமையாசிரியர் சரவணன் நடத்தினார்



காலாண்டு விடுமுறை நாட்களில் மேலமடை, கல்மேடு, வண்டியூர் தீர்த்தக்காடு, அனுப்பானடி, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாணவர்களை அழைத்து புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, கதை கூறி நடித்து பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

அவர் கூறுகையில், ''பாடப் புத்தகங்களை தாண்டி கதை புத்தகங்களையும் படிக்கும் ஆர்வம் ஏற்படுத்தி மாணவர்களை நுாலகங்களுக்கும் அழைத்து சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினேன்.விடுமுறையில் அலைபேசி, 'டிவி', கணினியில் மூழ்கும் பழக்கத்தை மாற்றும் விதமாக இம்முகாம் நடத்தப்பட்டது'' என்றார்