
புதுமையான முறையில் வகுப்பறையில் கற்பித்தலுக்கான தேசிய அளவு போட்டியில் ஆசிரியர் திலீப் அவர்களின் படைப்பான விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான முறையை அறிமுகப்படுத்தியதற்கான தேசிய விருதினை NCERT ,NCTE நிறுவனங்கள் வழங்கி கௌரவபடுத்தியுள்ளது.
இப்போட்டியில் தேசிய அளவில் 240 மேற்பட்ட ஆசிரியர்களும் ,பேராசிரியர்களும் கலந்துகொண்டனர் இறுதி தேர்வில் 17 மாநிலங்களை சார்ந்த 28 ஆசிரியர்கள் தாள்களை சமர்பித்தனர் அதில் தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இருந்து இரண்டு ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது .
ஆங்கிலத்தில் திலீப் சமர்பித்த GAMIFIED GRAMMAR இதில் ஒவ்வொரு ஆங்கில இலக்கணத்திற்கும் ஒரு விளையாட்டை வகுப்பறையிலோ அல்லது விளையாட்டு மைதானத்திலோ விளையாட வைத்து தொடர்ந்து கணினி தொடுதிரையில் விளையாட அதன் பின் தேர்வு என்னும் முறையில் இதை வகுப்பறையில் கையாண்டு சமர்பித்தார். ஆசிரியர்களில் இவருடன் பெர்ஜினும் Science with ICT தலைப்பிற்கு விருது பெறுகிறார் .
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வகுப்பறையில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க புதுமையான விஷயங்களை ஒவ்வொரு நாளும் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறோம் . அவ்வாறு தாங்கள் செய்த புதுமையான முயற்சிகளை பிற ஆசிரியர்களுக்கும் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல இப்போட்டி சிறந்த வாய்ப்பு.












