JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, October 1, 2018

கல்லுாரி சான்றிதழ் நகலை கிழித்தெறித்த மாணவர்கள்!

கல்லுாரி சான்றிதழ்களை கிழித்தெறிந்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



புதுச்சேரி மாநிலத்தில் 390 கான்ஸ்டபிள் பணி இடங்களை நிரப்ப, போலீஸ் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் வயதை 22ல் இருந்து 24ஆக உயர்த்த வேண்டும் என மாணவர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தினர்.

சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டத்தை, கடந்த 26ம் தேதி துவக்கினர். மூன்றாவது நாளாக நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது கவர்னர், முதல்வருக்கு எதிராக கோஷமிட்ட மாணவர் கூட்டமைப்பினர், திடீரென காவலர் தேர்வில் வயது வரம்பை உயர்த்த வலியுறுத்தி, தங்களது கல்லுாரி சான்றிதழ்களின் நகல்களையும் கிழித்து எறிந்து போராட்டம் நடத்தினர்.



வேலைவாய்ப்ப அளிக்காத இந்த சான்றிதழ்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என கேள்வி எழுப்பினர். உண்ணாவிரம் இருந்த மாணவர்களுக்கு, விவேகானந்தா கோச்சிங் சென்டர் நிறுவனர் நாகராஜன் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தனர்.