திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் பள்ளி கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையினரான கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் 2018-19 ஆம் ஆண்டிற்கு பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு (புதுப்பித்தல் மற்றும் புதியது) விண்ணப்பிக்க கடந்த செப்.30 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15-ஆம் தேதி வரையும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 31 வரையும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி படிப்பு மற்றும் 11, 12-ஆம் வகுப்புக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கான (புதுப்பில் மற்றும் புதியது) விண்ணப்பங்களை ww.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Tuesday, October 9, 2018
சிறுபான்மை மாணவர்கள் கல்வி நிதியுதவி: அக்.15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்