JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, October 14, 2018

2 வயது மழலைக்கு 6 மணி நேர வகுப்பு : அதிர வைக்கும் கே.ஜி., பாடத்திட்டம்




இரண்டு வயது குழந்தைக்கு, ஆறு மணி நேரம் வகுப்பு எடுக்கும் பாடத்திட்டத்தை, பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, புதிய பாடத்திட் டத்தை, அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பில், நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அமலுக்கு வந்துள்ளன. மற்ற வகுப்புகளுக்கு, அடுத்த ஆண்டு, புதிய பாடப் புத்தகம் அமலுக்கு வருகிறது.தற்போது, ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., என்ற, மழலையர் வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, இரண்டு முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகள் படிக்கும், ப்ரீ கே.ஜி., வகுப்புக்கு, தினமும், ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பாடம் நடத்தப்பட உள்ளது.



பதினாறு வயது மாணவர்களுக்கே, படிப்பு சுமையாக கருதப்படும் நிலையில், இரண்டு வயதுகுழந்தைகளுக்கு, தாங்க முடியாத அளவுக்கு பாடங்களை போதிப்பது, பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் முறையே, இரண்டு, மூன்று மற்றும் நான்கு வயது நிரம்பிய குழந்தைகளை தான் சேர்க்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு, காலை, 9:30 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, பள்ளியில் இருக்கும் வகையில், பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ப்ரீ கே.ஜி., குழந்தைகளுக்கு, ஜூன் முதல், ஏப்ரல் வரை, பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான அறிமுக பேச்சு, குடும்பம்,பெற்றோர் விபரங்களை சொல்லுதல், பழங்கள், காய்கறிகள், சாலைகள், பூக்கள், பறவைகள், வீட்டு விலங்குகள், நண்பர்கள், காட்டு விலங்குகள், பூச்சிகள், செடிகள், கொடிகள், இசை கருவிகள், உணவு வகைகள், போக்குவரத்து வகைகள் மற்றும் பண்டிகைகள் போன்றவற்றை பட்டியலிட்டு, பாடம் நடத்த உள்ளனர்.

ஏற்கனவே, குழந்தைகளுக்கு, படிப்பின் பெயரில், பெற்றோரும், பள்ளிகளும் அழுத்தம் கொடுப்பதாக, குழந்தை கள் நல ஆர்வலர்களும், கல்வியாளர்களும், மனநல ஆலோசகர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதனால் தான், 2ம் வகுப்பு வரை, வீட்டு பாடமே வழங்கக் கூடாது என்ற உத்தரவை, உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில், மிக அதிகமான சுமையுடன், மழலைகளுக்கு பாடத்திட்டம் தயாரித்திருப்பது, சமூக ஆர்வலர்களை, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.