
தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் - 10,
கறிவேப்பிலை (உருவியது) - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 10,
பெருங்காயம் - ஒரு கட்டி,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை:
நெல்லிக்காய்களை நன்கு கழுவித் துடைத்து, கொட்டைகளை மட்டும் நீக்கிவிட்டு நன்கு காயவைக்கவும் ( இது தான் நெல்லிமுள்ளி) . எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தைப் பொரியவிட்டு எடுக்கவும்.
பிறகு, அதே எண்ணெயில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையை அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுத்துக்கொள்ளவும்.
நல்ல வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை, சூடான சாதத்தில் கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வர கூந்தல் நன்றாக வளரும்.




