JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, October 7, 2018

அக்டோபர் 31க்குள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உத்தரவு

பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து, கிராமப்புற
மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்
மாவட்டத்துக்கு, 150 பேரை தேர்வு செய்து, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கல்வி சார் சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.



மாவட்டத்துக்கு தலா, 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் இல்லாத இடங்களுக்கு, வானிலை மாற்றங்களை கருத்தில்கொண்டு, ஒரு நாள் கல்வி சுற்றுலா, வரும், 31க்குள் அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களை மூன்று பஸ்களில் அழைத்துச் செல்ல வேண்டும். மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் இடம்பெற வேண்டும்.

ஒரு பஸ்சில் நான்கு ஆசிரியர்கள், மாணவர்கள் பாதுகாப்புக்கு உடன் செல்ல வேண்டும். காலை, 7:00 முதல், மாலை 5:00 மணி வரை செல்லும்.



ஒரு நாள் சுற்றுலாவுக்கு, கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். தற்போது மழை பெய்வதால், வானிலை மாற்றம் சீரானதும், சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்' என்றனர்