Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 25, 2018

ரூ.4,72,00,000 அபராதம் விதிப்பு .!தகவலை திருடிய ஃபேஸ்புக் நிறுவனம்..!இங்கிலாந்து அரசு அதிரடி


இங்கிலாந்து அரசு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.72 கோடி அபராதம் விதித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டது.





கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால், எட்டரை கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதுதொடர்பாக பேசி ஃபேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜூகர்பெர்க், பயனர்களின் தகவல்களை காப்பதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டார்.





ஃபேஸ்புக் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தேடுபொறி மூலம் தகவல்களை எடுத்து தவறான வழியில் பயன்படுத்த முடியும் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே பயனர்களின் தகவல்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப் போவதாகவும், குறிப்பாக தேர்தல் நடக்கப் போகும் நாடுகளின் பயனர்கள் தகவல்களுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் ஜூகர்பெட்க் கூறினார்.



இந்நிலையில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.72 கோடி அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து அரசு