Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 25, 2018

மொபைல்போன் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்று சக்தியாக உருவெடுக்கும் இந்தியா! இனி இந்தியாதான் டாப்!!


செல்லிடப்பேசி(மொபைல்) தயாரிப்பில் உலக அளவில் 2 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. மத்திய அரசின் "இந்தியாவில் தயாரிப்போம்" என்ற திட்டத்தின் கீழ் தொடர்ந்து மொபைல் போன்களின் உற்பத்தி இந்தியாவில் பெருகி வருகிறது.




தில்லியை அடுத்த நொய்டாவில், தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் செல்லிடப்பேசி நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையை கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் அமைத்தது. உலகிலேயே மிகப்பெரிய செல்லிடப்பேசி தயாரிப்பு தொழிற்சாலை இதுவாகும். இந்த தொழிற்சாலை மூலம் ஆண்டுக்கு 12 கோடி செல்லிடப்பேசிகளை தயாரிக்க முடியும்.



இதன் மூலம், அடிப்படை வசதி கொண்ட செல்லிடப்பேசி முதல் அதிநவீன எஸ்9' செல்லிடப்பேசி வரை இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் செல்லிடப்பேசிகளில், 30 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.





சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரால், இந்தியாவில் செல்லிடப்பேசி அதாவது மொபைல்போன் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது.

மத்திய அரசின் "இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தின் மூலம் லாவா, சாம்சங், ஓப்போ, ஸியோமி, ஃபாக்ஸ் கான் ஆகிய செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்கின்றன.



கடந்த 4 வருடங்களில் மட்டும் செல்லிடப்பேசி துறையில் 120 தொழிற்சாலைகள் மூலம் 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கி உள்ளதாக இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு பொருட்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.






இந்நிலையில், சாம்சங், ஓப்போ போன்ற நிறுவங்கள் இந்தியாவில் தங்களது ஆலையை நிறுவுகின்றன. விரைவில், செல்போன் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.