Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 7, 2018

உங்கள் போன் லாக் ஆகி விட்டதா? அன்லாக் செய்வது எப்படி?





உங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது.

போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது என்று நிபுணர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், காம்பிளேக்ஸ் பாஸ்வேர்ட்கள் மனதில் வைத்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். அப்படி ஒரு பாஸ்வோர்டை வைத்து விட்டு, பாஸ்வோர்ட் தெரியாமல் போன் லாக் ஆகி விட்டதா? அதை அன்லான் செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



அன்லாக் செய்யும் முறை 1

ஆண்டிராய்டு டிவைஸ் மேனேஜர்-ஐ பயன்படுத்துதல்

1. https://myaccount.google.com/find-your-phone என்ற இணைய தளத்தை ஒபன் செய்ய வேண்டும்.


2. உங்கள் போன் உடன் இணைக்கப்பட்டுள்ள இமெயில் அக்கவுண்டை டைப் செய்யவும்.


3. அக்கவுண்ட் உள்ளே சென்றதும், அதில் இடம் பெற்றுள்ள எந்த டிவைஸ்-ஐ அனலாக் செய்ய வேண்டுமோ அதை செலக்ட் செய்ய வேண்டும்.


4. அடுத்த ஸ்கிரீனில் இடம் பெற்றுள்ள லாக் ஸ்க்ரீன் என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.
5. அதில் உங்கள் புதிய பாஸ்வேர்டை பதிவு செய்ய வேண்டும்.


6. பின்னர் அந்த போனை லாக் செய்ய வேண்டும்.
7. பின்னர் ஸ்மார்ட்போனை எடுத்து புதிய பாஸ்வேர்டை பயன்படுத்தி ஓபன் செய்யலாம்.



அன்லாக் செய்யும் முறை 2

நீங்கள் கூகிள் அசிட்தான் சரியாக இருந்தால், அன்லாக் வித் வாய்ஸ் என்ற ஆப்சன் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த வசதி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாய்ஸ் அடிப்படையிலேயே வேலை செய்யும். இந்த வசதி ஆன் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் சிம்பிளாக ஓகோ கூகிள் என கூறி போனை அன்லாக் செய்யலாம்.

அன்லாக் செய்யும் முறை 3

1. 'https://findmymobile.samsung.com/' என்ற இணையதள பக்கத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும்




2. அதில் இடம் பெற்றுள்ள அன்லாக் ஸ்மார்ட் போன் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.