JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, October 6, 2018

670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் கூடம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்

''டிசம்பர் மாத இறுதிக்குள், 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் கூடம் அமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.



ஈரோட்டில், நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வரும் ஜன., 1 முதல், தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலாகிறது.இதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், குப்பைகளில் நச்சுத்தன்மை உள்ள பொருட்களை அகற்றிவிட்டு, பிற குப்பையை கையாள்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. 



தமிழகத்தில், 3,000 பள்ளிகளில் நவ., இறுதிக்குள், ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து செயல்படுத்தப்படும். வருமாண்டில், ஒன்று முதல், ஐந்து வரை, ஆறு முதல், எட்டு வரை, பள்ளி குழந்தைகளுக்கு சீருடை மாற்றம் செய்யப்படுகிறது.