JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, October 2, 2018

நெசவாளர்கள், கைவினைஞர்கள் வாழ்வு உயர தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் காந்தி பிறந்தநாளில் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

நெசவாளர்கள் வாழ்வு உயர்ந்திட தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.






இதுதொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை:

இந்திய முழுவதும் காந்தியடி களின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்நாளில், நெசவாளர்களின் வாழ்வு மேன்மை பெற, காந்தி அறிவுறுத்தியவாறு இந்திய கலாச்சாரத்தைப் பிரதி பலிக்கும் கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிந்து கதர் துணிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால் நவீன நாகரீகத்துக்கு ஏற்றவாறு புத்தம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதராடைகள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்களால் புதிய யுக்திகளுடன் தயாரிக்கப் படும் பலதரப்பட்ட கண்கவர் கைவினைப் பொருட்கள் தமிழகத் தில் உள்ள 88 கதர் அங்காடிகள் மூலம் விற்கப்பட்டு வருகின்றன.

மேலும், கதர் துணிகளின் விற் பனையை ஊக்குவிக்க தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரி யத்தின் மூலம் அனைத்து கதர் ரகங்களும் 30 சதவீத தள்ளுபடி விலையில் ஆண்டு முழுவதும் வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை



ஏழை நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்த, தமிழக அரசு கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நலவாரியத்தின் மூலம் நூற்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும் பத்தினருக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, விபத்து, இயற்கை மரணத்துக்கான உதவித் தொகை வழங்கி வருகிறது.

2017-18-ம் நிதியாண்டில் சிறப் புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில், ரூ.2 கோடியே 45 லட்சம் நிதியில், 587 நூற்பாளர்கள் மற்றும் 50 நெசவாளர்களுக்கு ராட்டைகள் மற்றும் தறிகளை இலவசமாக வழங்கி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துக்கு ரூ.4 கோடியும், சர்வோதய சங்கங் களுக்கு ரூ.30 கோடியும் நடப் பாண்டில் தள்ளுபடி மானியமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.



கிராமப்புற ஏழை நெசவாளர் கள் மற்றும் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் கதர் ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களைப் பள்ளி, மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.