தமிழகத்தில், டிரைவிங் லைசென்சுக்கு, ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் நடைமுறை, நேற்று அமலுக்கு வந்தது.

தமிழகத்தில், ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி நேர அலுவலகங்களில், டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான நடவடிக்கைகள், 'ஆன்லைன்' வாயிலாக நடந்து வருகின்றன.

தமிழகத்தில், ஆர்.டி.ஓ., எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி நேர அலுவலகங்களில், டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான நடவடிக்கைகள், 'ஆன்லைன்' வாயிலாக நடந்து வருகின்றன.
விரயம் ஆனால், இதற்கான கட்ட ணத்தை மட்டும், நேரில் செலுத்த வேண்டியிருந்தது. தற்போது கட்டணத்தையும், ஆன்லைன் வாயிலாக செலுத்தும் முறை, நேற்று அமலுக்கு வந்தது.சென்னை, கே.கே.நகர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், இந்த நடைமுறையை துவக்கி வைத்து, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் பேசியதாவது:தமிழகத்தில், போக்குவரத்து துறையை நவீனப்படுத்தும் நோக்கில், துறை தொடர்பான பணிகளை இணையதளம் வாயிலாக செயல்படுத்தி வருகிறோம். டிரைவிங் லைசென்ஸ், வாகன வரி உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் செலுத்தும் முறையும், ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், கால விரயம் தவிர்க்கப் படும்.போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி., வழியாக நிரப்பப்படும். வாகன எண்ணிக்கையில், நாட்டிலேயே இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. என்றாலும், டிரைவர்களுக்கு, சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மிகக்குறைவாக உள்ளது.அதிவேக வாகன ஓட்டிகளால், ஒவ்வொரு ஆண்டும், 14 ஆயிரம் விபத்துகள் ஏற்படுகின்றன. அதில், 75 சதவீதம், டூ - வீலர்களால் நிகழ்கின்றன. 'ஹெல்மெட்' அணியாததால், தலைக்காயம் ஏற்பட்டு, பலர் இறக்கின்றனர்.எனவே, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி, கல்லுாரிகளில் சாலை பாதுகாப்பு மன்றங்களை உருவாக்க உள்ளோம்.
மாசில்லாத பேட்டரி பஸ்களை வாங்க, 'சி - 40' என்ற அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளோம். விரைவில், 100 பஸ்கள் வாங்கி, 80 பஸ்களை சென்னையிலும், 20 பஸ்களை கோவையிலும் இயக்க உள்ளோம். பாதிப்புடீசல் விலை உயர்வால், அரசு போக்குவரத்துக் கழகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அரசிடம், டீசல் மானியம் கேட்டுள்ளோம்.மின்சார ரயில், மெட்ரோ ரயில்கள் மற்றும் சென்னை மாநகர பஸ்களில் பயணிக்கும் வகையில், 'ஸ்மார்ட் கார்டு'களை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் ரவி, சத்யா, போக்குவரத்து கமிஷனர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். .





