Subscribe Us

Thursday, October 18, 2018

சர்க்கரை வியாதியா? சக்கரையின் அளவு குறையவில்லையா. இதை செய்து பாருங்கள்.





கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி இந்தப் பொடியையும் போட்டு நன்றாக கொதிக்க விடவும்.தண்ணீர் பாதியாக சுண்டியதும். இரண்டு டம்ளராக வடித்து எடுத்துக் கொள்ளவும். அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் ஆறு மணிக்கு குடித்து விட்டு அடுத்த மூன்று மணி நேரம் எந்த உணவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. 

மாலை 6 மணிக்கு ஒரு டம்ளர் குடித்து விட்டு அடுத்த மூன்று மணி நேரம் எந்த உணவும் சாப்பிடக்கூடாது.இதைத்தொடர்ந்து சர்க்கரையின் அளவு குறையும் வரை செய்து வரவும். 



குறைந்த பின்பு கண்டிப்பாக இந்த மருந்தைத் சாப்பிடக்கூடாது. (சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்துவிடும்.) கிராமப்புறங்களில் கடைபிடிக்கப்படும்
கைகண்ட மருத்துவக் குறிப்பாகும்.