Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 24, 2018

நாடு முழுவதும் அறிமுகம் மொபைல் ஆப் மூலம் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்


யுடிஎஸ் மொபைல் ஆப் மூலம் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் முறையை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்தது.







முதலில் மும்பையிலும் பின்னர் டெல்லி-பால்வால் மற்றும் சென்னை நகரிலும் இந்த வசதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மொபைல் ஆப் மூலமாக முன்பதிவில்லா டிக்கெட்களை பெறுவதற்கான வசதியை ரயில்வே துறை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் நீண்ட தூரம் பயணிகளும் இந்த ஆப் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரி கூறுகையில், 'யுடிஎஸ் மொபைல் ஆப்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது' என்றார்.கடந்த 4 ஆண்டுகளில் 45லட்சம் டிக்கெட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 87ஆயிரம் டிக்கெட்டுகள் மொபைல் போன் மூலமாக பெறப்பட்டுள்ளது. பயண டிக்கெட் மட்டுமின்றி பிளாட்பாரம் டிக்கெட், மாதாந்திர பயண சீட்டுக்களையும் இந்த ஆப் மூலமாகவே பெறலாம்.