Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 24, 2018

பத்திரப்பதிவுக்கு வந்த பத்திரங்கள் நிலை என்ன? வீட்டில் இருந்தபடியே இணையவழியாக பொதுமக்கள் அறிந்துகொள்ளும் புதிய வசதி: பதிவுத்துறை ஐஜி தகவல்


சார்பதிவு அலுவலகங்களில் பதிவுக்கு வந்த பத்திரங்களின் நிலை என்ன என்பது குறித்து தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையவழியாக எளிதாக அறிந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் தெரிவித்தார். 



இது குறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கை:. ஸ்டார் 2.0 திட்டத்தின் மைய நோக்கத்திற்கு ஏற்ப மென்பொருளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பதிவு நடைமுறையில் ஒரு வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்கு மென்பொருள் வழி உறுதி செய்யப்பட்டுள்ளது.




குறித்த நேரத்தில் வரிசைக்கிரம்மாக பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏற்ப ஸ்டார் 2.0 மென்பொருளில் இணையவழி நாள் மற்றும் நேரம் முன் பதிவு செய்த நேர வரிசையில் வரிசைக்கிரமமாக என்ற முறையில் ஆவணம் பதிவு செய்யும் நடைமுறை. .



ஆவணப் பதிவு மறுக்கப்படும் போது எந்த காரணத்திற்காக பதிவு மறுக்கப்படுகிறது என்ற விவரம் அச்சிட்டு பதிவு மறுப்புச் சீட்டு வழங்கும் நடைமுறை. * ஆவணத்தின் நிலை குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் வசதி. இந்த குறுஞ்செய்தி ஆவணப்பதிவின் 33 வெவ்வேறு நிலைகளில் அனுப்பப்படுகிறது. 

இதன் அடுத்தகட்டமாக ஸ்டார் 2.0 திட்டத்தின் மைய நோக்கத்திற்கு ஏற்ப ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டது முதல் பதிவு செய்த அசல் ஆவணம் திரும்பப்பெறும் வரை ஆவணத்தின் மீது எடுக்கப்படுகின்ற நடவடிக்கை விவரம் குறித்து பொதுமக்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமோ மட்டுமே தெரிந்து கொள்ளும் நிலையை மாற்றும் விதமாக ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலிருந்து திரும்ப வழங்கும் நிலை வரையிலான எந்த ஒரு நிலை குறித்தும் பொதுமக்கள் வீண் அலைச்சல் இன்றி தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் எளிதாக அறிந்துகொள்ளும் புதிய வசதி அக்டோபர் 22ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த புதிய வசதியின் வழி பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தே பதிவுத்துறையின் www.tnreginet.gov.in என்ற இணையதளத்தில் 'ஆவணத்தின் நிலை' என்ற தெரிவை தேர்வு செய்து தங்களின் தற்காலிக ஆவண எண்ணையோ அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் முழுமையான எண்ணையோ அல்லது நிலுவை ஆவண எண்ணையோ அளித்தால் அந்த ஆவணத்தின் மீது எடுக்கப்பட்ட முழு நடவடிக்கைகளும் திரையில் தோன்றும். இதன் மூலம் ஆவணத்தின் தற்போதைய நிலையினை எளிதாக அறிந்து கொள்ளலாம். 



மேலும் ஆவணம் திரும்ப வழங்க தயாராக இருப்பின் உடன் அலுவலகம் சென்று ஆவணத்தினை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் வீண் அலைச்சல் வெகுவாக குறையும். இந்த வசதி அக்டோபர் 19ம் தேதி முதல் உருவாக்கப்பட்ட ஆவணங்களுக்கு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.